×

பதவிக்காலம் முடியும் நிலையில் வளர்ச்சி திட்ட பணிகளை செய்து தரக்கோரி ஊராட்சிக்குழு தலைவர் தர்ணா

 

திருப்பூர், ஜன. 3: பதவிக்காலம் முடியும் நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்தியபாமா (அ.தி.மு.க.) மற்றும் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் நான் தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தும், திட்டப்பணிகள் புறக்கணிக்கப்பட்டது.

இதுபோல் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் 3 வார்டுகளில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. திட்ட மதிப்பீடுகளும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாக செய்ய வேண்டும். மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளி கண்ணன் அனைத்து பணிகளையும் புறக்கணிக்கிறார். இதுபோல் என் பதவியையும் இழிவுபடுத்துகிறார். எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post பதவிக்காலம் முடியும் நிலையில் வளர்ச்சி திட்ட பணிகளை செய்து தரக்கோரி ஊராட்சிக்குழு தலைவர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Panchayat ,dharna ,Tiruppur ,District Panchayat ,President ,Sathiyabama ,AIADMK ,Tiruppur District Collector ,Tiruppur district… ,
× RELATED நொய்யல் ஆறு தூர்வாரும் பணி;...