உடுமலை, ஜன.4: உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் தினசரி சுமார் 34 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. வீடு வீடாக செல்லும் சுகாதாரப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள். மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் மாற்றுப் பயன்பாட்டுக்கும் அனுப்பப்படுகின்றன. மேலும் ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
சிவசக்தி காலனியில் முன்பு குப்பை கிடங்கு செயல்பட்டு வந்தது. தற்போது குப்பை கிடக்கு பொள்ளாச்சி சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக பழைய கிடங்கில் உள்ள குப்பைகளை ‘பயோ மைனிங்’ முறையில் சிறு சிறு துகள்களாக நறுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் மக்கும் குப்பை உரமாக பயன்படுத்தப்படும். சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படும். இந்த பணிகள் 6 மாதங்களில் முடிவடையும். அதன்பிறகு பழைய கிடங்கில் குப்பைகள் இருக்காது. அந்த இடத்தை எவ்வாறு பயன்படுத்துவது என ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பயோ மைனிங் முறையில் குப்பைகள் மறுசுழற்சி பணி தீவிரம் appeared first on Dinakaran.