×

திருப்பூரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

 

திருப்பூர், ஜன.1: பீகார் மாநிலம் முசைபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரியாத் குமார் (36). இவரது மனைவி ஜோதி தேவி (32). இவர்கள் கடந்த 10 வருடமாக திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் தங்கி பணியின் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளனர்.  இவர்களுக்கு 8 வயதில் ரோஷன் குமார் என்ற மகன் உள்ளார். இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்றைய தினம் கணவன், மனைவி இருவரும் ரோஷன் குமாரை வீட்டில் விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகன் வீட்டிற்குள் இல்லாமல் இருந்துள்ளார். அருகில் தேடி பார்த்தபோது சுமார் 3 அடி ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ரோஷன் குமார் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருப்பூரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Riyad Kumar ,Mushaipat ,Bihar ,Jyothi Devi ,Kodikambam ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!