×

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்

மானாமதுரை, டிச.30: மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியது. மானாமதுரை ஒன்றிய அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கரலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் குணசேகரன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சாத்தையா மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் சங்கையா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், முருகேசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் மன்றத்தின் ஒன்றியத் தலைவராக ராஜ்குமார், செயலராக ராகவன், பொருளாளராக கண்ணையா, துணைத் தலைவராக பாலமுருகன், துணைச்செயலாளராக ரஞ்சித்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மானாமதுரை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,All India Youth Congress ,Manamadurai Government Hospital ,Manamadurai Union All India Youth Congress conference ,Sankaralingam ,Tamil Nadu Farmers' Association ,State ,President ,Gunasekaran ,Dinakaran ,
× RELATED கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு...