×

அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிய பாதுகாப்புக் குழு: நிர்வாகம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பாதுகாப்புக் குழுவை அமைத்து பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் நடவடிக்கைகளுக்காக குழுக்கள் அமைக்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடக்கிறது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டும், அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் 16 பெண் பேராசிரியர்கள் கொண்ட பாதுகாப்புக்குழுவை அமைத்து பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்புக்குழு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த குழுவில் பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், பல்கலைக்கழக வளாகத்தில் 140 காவலாளிகள் ரோந்து பணியில் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்து, அதன்படி, கூடுதலாக 40 காவலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கிறது. மேலும் பல்கலைக்கழகத்துக்குள் செயல்பட்டுவரும் விடுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கையில் எடுக்கவும் வார்டன்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

The post அண்ணா பல்கலைக் கழகத்தில் புதிய பாதுகாப்புக் குழு: நிர்வாகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,University Coordination Committee ,Guindy, Chennai ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...