×

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததால் ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் சீல் வைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. ஈரோடு கிழக்கில் பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள தலைவர்களின் சிலைகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங். எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்..!! appeared first on Dinakaran.

Tags : Erode East ,Erode ,Mayor ,Erode Corporation ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு என தகவல்..!!