×

யுஜிசி விதி திருத்தியது மாநில கல்விக் கொள்கையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: யுஜிசி விதிகளை திருத்தியது மாநில கல்விக் கொள்கையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். யுஜிசி விதிகளை தன்னிச்சையாக திருத்தியதற்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் இந்த திருத்தம் உள்ளது. மேலும், கல்வி சாராத நபர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் அபாயம் இந்த திருத்தத்தில் உள்ளது. யுஜிசி திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

The post யுஜிசி விதி திருத்தியது மாநில கல்விக் கொள்கையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : UGC ,Selvapperundhagai ,Chennai ,Tamil Nadu ,Congress ,
× RELATED யுஜிசி விதிகள் திருத்தம்.. மாநில...