×

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

 

பெரம்பலூர்,டிச.28: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமை யில் நேற்று (27ஆம்தேதி) பெரம்பலூர் மாவட்டஎஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவழக்குகள் குறித்து ஆய்வு செய்தார்.

புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்ற கலந்தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனையும் வழங்கினார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப் பிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான கலந்தாய்வு நடத்தினார். பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சட்டம் ஒழுங்கு மற்றும் தனிப் படை காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இந்தக் குற்றக் கலந் தாய்வில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலை மையிடம்) மதியழகன், பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக்கியராஜ், மங்களமேடு உட்கோட்ட டிஎஸ்பி தனசேகரன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி காமராஜ் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம்,மங்களமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர், பெரம்பலூர் மற்றும் மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு, பெரம்பலூர்மாவட்ட குற்றப் பிரிவு உள்பட அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், நீதி மன்ற காவலர்கள் ஆகி யோர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Perambalur District SP Office ,Perambalur ,SP Adarsh Passera ,Perambalur District SP Adarsh Passera… ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் உளுந்து...