- பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி
- அரியலூர்
- அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம்
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- மாவட்டம்
- கலெக்டர்
- ரத்தின சாமி
- அரியலூரில் பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி
- தின மலர்
அரியலூர், ஜன.5: அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஒவ்வொரு ஆண்டும் காலஞ்சென்ற முன்னாள் தமிழ்நாடு முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் வகையில் அண்ணா மிதிவண்டிப் போட்டி நடத்தப்படுகிறது.
அந்த வகையில் 2024-25ம் ஆண்டிற்கான அண்ணா மிதிவண்டிப் போட்டிகளை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் நேற்று மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இம்மிதிவண்டிப் போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் 13, 15, 17 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிமீ, மாணவியர்களுக்கு 10 கிமீ, 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிமீ, மாணவியர்களுக்கு 15 கிமீ, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிமீ, மாணவியர்களுக்கு 15 கிமீ ஆகிய தொலைவுகளில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 650 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த மிதிவண்டி போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே தலா ரூ.5,000, தலா ரூ.3,000 மற்றும் தலா ரூ.2000, வீதமும், 4 முதல் 10 இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.250, வீதம் பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாணவ, மாணவியர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.
The post அரியலூரில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி appeared first on Dinakaran.