×

கந்தர்வக்கோட்டையில் ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம்

புதுக்கோட்டை : கந்தர்வக்கோட்டையில் ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு, ஆட்சிமொழித் திட்ட விளக்கக்கூட்டம் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளினை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 18.12.2024 முதல் இன்று (27ம்தேதி) வரை கொண்டாடப்படுகிறது. ஆட்சிமொழிச் சட்டவாரத்தின் ஆறாம் நாள் நிகழ்சியான நேற்று கந்தர்வக்கோட்டை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக்கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறையின் உதவியாளர் சுப்புராமன் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுவாமிநாதன் ஆட்சிமொழித் திட்ட விளக்கக்கூட்டத்தினை தலைமையேற்றுத் தொடங்கி வைத்து பேசினார்.

ஆட்சிமொழித் திட்டம் குறித்து தமிழ்ச்செம்மல் சந்திரன், எழுத்தாளர் அண்டனூர் சுரா ஆகியோர் பேசினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாக்கண்ணு, ஓவியர் அரங்க. கலியபெருமாள் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்.. மதியழகன், அகவை முதிர்ந்த தமிழறிஞர் தங்கமணி, ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகப்பணியாளர்கள், பல்துறை அரசுப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தமிழார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கந்தர்வக்கோட்டையில் ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kandaravakota ,Pudukkottai ,Language ,Kandarvakota ,Pudukkottai District Administrative Language Law Week ,Tamil Language Project Briefing ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பட்டிமன்றம்