சென்னை: மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் கேப்டன் விஜயகாந்த் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது; மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் – கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்! இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும். என்று பதிவிட்டுள்ளார்.
மறைந்த கேப்டன் விஜயகாந்தை நினைவுகூர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; என் அன்புக்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி. என்று பதிவிட்டுள்ளார்.
The post மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம்; முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், ரஜினிகாந்த் புகழாரம்! appeared first on Dinakaran.