×

அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான தேர்வு

திருச்சி, டிச.27: தமிழகம் முழுவதும் அரசுத்துறைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களின் பதவி உயர்விற்கான துறைத்தேர்வை தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அரசு ஊழியர்களின் பதவி உயர்விற்கான தேர்வு நேற்று முதல் தொடங்கியது. இத்தேர்வானது வரும் டிச.29ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று திருச்சி தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் அரசு அலுவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதில் முதல் பகுதி காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. முதல் பாதியில் 196 பேரும், மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு நிறைடைந்த இரண்டாவது பாதியில் 168 பேரும் தேர்வு எழுதினர்.

மீண்டும் இன்று நடைபெறும் தேர்வில் காலையில் 187 பேரும், மாலையில் 185 பேரும், நாளை(டிச.28) நடைபெறும் தேர்வில் காலை 154 பேரம், மதியம் 403 பேரும், நாளை மறுநாள் (டிச.29) காலை 381 பேரும், மதியம் 289 பேரும் தேர்வு எழுத உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1963 பேர் தங்களுடைய பதவி உயர்விற்கான தேர்வை எழுதுகின்றனர்.

The post அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான தேர்வு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tamil Nadu Public Works Selection Board ,Tamil Nadu ,
× RELATED அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ள...