×

பெரம்பலூர் சிவன்கோயிலில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

பெரம்பலூர், டிச.27: பெரம்பலூர் சிவன் கோவில் குரு பகவானுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையிலுள்ள  அகிலாண்டேஸ்வரி சமேத  பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் குரு பகவானுக்கு ( தட்சணாமூர்த்தி) மார்கழி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை 11:30 மணி யளவில் பால்,தயிர்,இளநீர், சந்தனம், பழங்களுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து பகல் 12 மணி அளவில் மகாதீபாராதனை காண் பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜா, சிவனடியார்கள் மற்றும் பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம், எளம்ப லூர், நெடுவாசல், விளா முத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தட்சிணா மூர்த்தி அருள்பெற்றனர். பூஜைகளை கௌரி சங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார். ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் கோவிந்தராஜன் செய்து இருந்தார்.

The post பெரம்பலூர் சிவன்கோயிலில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Guru ,Perambalur Shiva Temple ,Perambalur ,Guru Bhagavan ,Dakshanamurthi ,Akilandeswari ,Sametha ,Brahmapureeswarar Temple ,Thuraiyur Road ,Perambalur Municipality… ,
× RELATED உள்ளத்தை கவரும் மார்கழி திங்கள்