×

பெரம்பலூர் சர்க்கரை ஆலை அரவையை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நாளை துவக்கி வைக்கிறார்

பெரம்பலூர்,டிச.25: எறையூரில் 2024-25-ஆம் ஆண்டிற்கான பெரம்பலூர் சர்க்கரை ஆலை அரவையை நாளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக ஆலை நிர்வாக தலைமை நிர்வாகி ரமேஷ் கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள பொதுத் துறை நிறுவனமான பெரம்பலூர் சர்க்கரை ஆலை, 2024-25 ஆம் ஆண்டு அரவை துவக்க விழா நாளை 26ஆம் தேதி காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள் நடைபெற உள்ளது.

இந்த விழாவில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்பி கே.என். அருண்நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் ஆலை அரவையினை தொடங்கி வைக்கஉள்ளார் .

இந்த ஆண்டு ஆலை அரவைக்கான கரும்பு அளவுகள் மொத்தம் 2 லட்சம் டன்கள் மதிப்பீடு செய்யப்பட்டும், தினசரி 2,800 டன்கள் அரவை செய்யப்படவும் திட்டமிடப் பட்டுள்ளது. அரவைப் பருவத்தில் சாராசரி சர்க்கரை கட்டுமானம் 9.75% எடுத்திட இலக்காக நிர் ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் கரும்பு உற்பத்தியாளர்கள், வாகன உரிமையாளர் சங்க. பிரதி நிதிகள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆலையின் ஊழி யர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் என ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் சர்க்கரை ஆலை அரவையை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நாளை துவக்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Perambalur Sugar Mill ,Shri ,C. Sivashankar ,PERAMBALUR ,MINISTER OF TRANSPORT ,ERAIUR ,Plant Executive Chief Executive ,Ramesh ,Perambalur District ,Veppanthata Circle, Eryur ,Cha. C. Sivasankar ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு!!