பெரம்பலூர்,டிச.25: பெரம்பலூரில் பெரியாரின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ், விசிக, மதிமுக, திராவிடர் கழகம் கட்சிகளின் சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (24ஆம் தேதி) காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும், ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறை மாநில இணைத் தலைவருமான ஜான் அசோக்வரதராஜன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், பழைய பஸ்டாண்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
நிகழ்ச்சியில் முன்னால் மாநில பொதுக் குழு உறுப்பினர் தங்க வேல், தகவல் தொழில் நுட்பம் & சமூக ஊடக பிரிவு மாநிலச் செயலாளர் ராஜீவ்காந்தி, மாவட்ட தலைவர் பழனிச்சாமி, குன்னம் சட்டமன்றத் தொகுதி தலைவர் பார்த் தீபன், ராஜா, நல்லதம்பி, ஆனந்த்குமார், ரமேஷ், நாரணமங்கலம் அருள்குமார் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் கட்சியின் சார்பாக பழைய பஸ்டாண்டு பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில், பகுத்தறிவாளர் கழக முன்னாள் மாவட்ட செயலாளர் முகுந்தன், திக நகரத் தலைவர் அக்ரி ஆறு முகம், மாவட்டச் செயலாளர் விஜயேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
பெரம்பலூர் மாவட்ட மதிமுக சார்பாக பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட அவைத்தலைவர் அய்யலூர் சுப்பிரமணி, மாவட்ட துணைச் செயலா ளர்கள் ஆசிரியர் காமராஜ், ரங்கராஜ், நகர செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், மணி, ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கள் பழனிமுத்து ஆசிரியர் துரைராஜ்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பாக பழைய பஸ்டாண்டு பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு பெரம்பலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் இரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகி கள் மன்னர் மன்னன், ஸ்டாலின், கிருஷ்ணகுமார், வெற்றியழகன், இடி முழக்கம், மனோகரன், பிச்சைப்பிள்ளை, பாஸ்கர், தங்க.சண்முகசுந்தரம், அய்யாக்கண்ணு, பாலன், வழக்கறிஞர் ஜெய வர்த்னே, காட்டுராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூரில் பெரியார் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.