×

யுனைடட் கோப்பை டென்னிஸ் இன்று ஆஸியில் தொடக்கம்

சிட்னி: டென்னிஸ் தொடர்கள் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக நடைபெறும் கடின தரை டென்னிஸ் போட்டியான ‘யுனைடட் கோப்பை’ டென்னிஸ் இன்று ஆஸியின் பெர்த், சிட்னி நகரங்களில் தொடங்குகிறது. முதலில் ஆண்களுக்கான குழுப் போட்டியாக சில ஆண்டுகளுக்கு முன்பு ெ தாடங்கிய இந்தப் போட்டி இப்போது ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமான குழுப் போட்டியாக நடைபெறுகிறது. புதிய ஆண்டுக்கான முதல் தொடரான யுனைடட் கோப்பை இன்று முதல் ஜன.5ம் தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெற உள்ள இந்தப்போட்டியில் 18 அணிகள் பங்கேற்க உள்ளன.

போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உட்பட 18 நாடுகளும் தலா 3 நாடுகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற நாடுகளுடன் தலா ஒரு ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள், கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டம் என 3 ஆட்டங்களில் விளையாட வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் நாடுகளும், பெர்த், சிட்னி நகரங்களிலும் நடக்கும் ஆட்டங்களில் ஒட்டு மொத்தமாக 2வது இடம் பிடிக்கும் தலா ஒரு நாடு என மொத்தம் 8 நாடுகள் காலிறுதிக்கு முன்னேறும். தொடர்ந்து , காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.

The post யுனைடட் கோப்பை டென்னிஸ் இன்று ஆஸியில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : United Cup Tennis ,Australia ,Sydney ,United Cup ,Perth ,Sydney, Australia ,Dinakaran ,
× RELATED சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 181 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்