×

பாகிஸ்தானில் பனிப்பொழிவில் சிக்கி 21 பேர் பலி

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முர்ரி என்ற பிரபல மலை வாசஸ்தலம் உள்ளது.  இந்த நகருக்கு நேற்று முன்தினம்  ஏராளமானோர் சுற்றுலா வந்தனர். அப்போது திடீரென கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.  ஆயிரக்கணக்கான  கார்கள் ஒரே நேரத்தில் நகரை விட்டு வெளியே செல்ல முயன்றபோது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் மாட்டிக் கொண்ட வாகனங்களில் இருந்த  பலர் பனியில் உறைந்து போயினர். இது பற்றி தகவல் கிடைத்ததும், மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு ஆயிரத்து 122 பேரை மீட்டனர். எனினும் 9 குழந்தைகள் உட்பட 21 பேர் வாகனத்துக்கு உள்ளேயே உறைந்து பரிதாபமாக இறந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, முர்ரி பகுதி பேரிடர்  பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டிவிட்டரில், ‘முர்ரி, கலியாட் பகுதிகளில் ஜனவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை கடும்  பனிப்பொழிவு இருக்கும் என பாகிஸ்தான் வானிலை மையம் ஏற்கனவே  எச்சரித்திருந்தது.  அதை கவனிக்காமல் ஒரே நாளில் ஒரு லட்சம்  வாகனங்களில் மக்கள்  நகருக்குள் வந்ததுதான் இந்த துயரத்துக்கு காரணம். இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது,’ என தெரிவித்துள்ளார்….

The post பாகிஸ்தானில் பனிப்பொழிவில் சிக்கி 21 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Lagore ,Punjab ,Murri ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது...