- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர் மு. திரு.
- சாமிநாதன்
- சென்னை
- எம். யூ கே. ஸ்டாலின்
- அமைச்சர் மு ஃபர். சமினாதன்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது குறித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காணொலி காட்சி மூலம் விழிப்புணர்வுப் பிரசாரங்கள், கல்லுரிகளில் சிறப்பு குழுக்கள் அமைத்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த தீவிர செயல் திட்டங்களுக்கு பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பையும் மாற்றத்தையும் உருவாக்கியுள்ளது. மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் மூலம் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது குறித்து ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன் அடிப்படையில், ரீல்ஸ் பிரிவில் 384 படைப்புகளும், போஸ்டர் டிசைன் பிரிவில் 1246 படைப்புகளும், மீம்ஸ் பிரிவில் 1273 படைப்புகளும், ஓவியப் பிரிவில் 1031 படைப்புகளும் என மொத்தம் 3934 படைப்புகள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டன. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் ஊடக மையம் மூலம் “போதையில்லாத தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் இருந்து சிறப்பான படைப்புகள் தேர்வு செய்யப்பட்ட 15 நபர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் எஸ்.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் மற்றும் ஊடக மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post போதையில்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார் appeared first on Dinakaran.