- துரை
- விகோவிற்கு
- திருச்சி
- துரை வைகோ
- அண்ணாமலை
- தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம்
- சர்ச் பிளாக்
- திருச்சி மத்திய பஸ் நிலையம்
- துரை விகோ கிண்டல்
- தின மலர்
திருச்சி: அண்ணாமலை 200 தொகுதிகளில் பாஜ டெபாசிட் இழக்கும் என்றுதான் கூறியிருப்பார் என துரை வைகோ கிண்டல் அடித்துள்ளார். தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திருச்சி தொகுதி மதிமுக எம்பி துரைவைகோ நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என பலரும் பலமுறை கேட்டும் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ₹2ஆயிரம் கோடி நிதியை அளிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. கல்வித்துறைக்கு மட்டுமல்ல, மிக்ஜாம் புயல், வெள்ளம் வந்த போது, ₹27 ஆயிரம் கோடி நிவாரண நிதி வேண்டும் என முதல்வர் கேட்டார், சுப்ரீம் கோர்ட் தலையிட்டு இதில் உத்தரவிட்ட பின்னரும், வெறும் ₹276 கோடி மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியது.
முதல்வர், செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் காரணமாக, மக்கள் மீது நம்பிக்கை வைத்து 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனக்கூறுகிறார். 200 தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்கும் என அண்ணாமலை கூறியிருக்க மாட்டார். 200 தொகுதிகளிலும் பாஜ டெபாசிட் இழக்கும் என்றுதான் அண்ணாமலை கூறியிருப்பார். அவர் மிகப்பெரிய அதிகாரியாக இருந்தவர், பொய் சொல்ல மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
The post 200 தொகுதிகளில் பாஜ டெபாசிட் இழக்கும்: துரை வைகோ கிண்டல் appeared first on Dinakaran.