- ஜி. வாசன்
- யூனியன்
- மாநில அரசுகள்
- சென்னை
- Tamaga
- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை கடற்படை
- யூனியன் மற்றும்
- தின மலர்
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேர், பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தது அத்துமீறியச் செயலாகும். இது போன்ற அராஜகத்தில் ஈடுபடும் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடித்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு, வருகிறது. இதனால் மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடிய நிலை ஏற்படுகிறது.
தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாப்பாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒன்றிய, மாநில அரசுகள் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்க, மீனவர்களின் நலன் காக்க தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
The post மீன்பிடி தொழிலை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.