மதுரை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக கைவிடும் வரை மக்கள் போராட்டம் தொடரும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியைத் தவிர்த்து 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஒன்றிய அரசு தெளிவாக்கியுள்ளது. அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம். ஒன்றிய அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை மக்கள் முறியடிப்பார்கள். அதுவரை மக்கள் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
The post டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக கைவிடுக: சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.