×

கிறிஸ்துமஸ் துளிகள்

நன்றி குங்குமம் தோழி

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் மரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ‘பிர்’ என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது. மரங்களில் இலைகள் மற்றும் மலர்களைக் கட்டி அலங்கரிக்கும் வழக்கம் இங்கிலாந்தில்தான் 1841-ம் ஆண்டு ஆரம்பித்தது. அர்பெர்டினால் என்ற அரசன் முதன் முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார்.

* கிறிஸ்துமஸ் விழாவின் மறுநாள் ‘பாக்சிங் டே’ என்று தேவாலயம் வாசலில் ஒரு பெட்டி வைத்திருப்பார்கள். அதில் நிதி வசதிப்படைத்தோர் பணம் செலுத்துவார்கள். அந்தப் பணம் ஏழைகளுக்கு வழங்கப்படும்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை 4 மணிக்கு தேவாலயத்தில் மணியோசை எழுப்பப்படும். அதைக் கேட்டு அருகிலுள்ள மற்ற தேவாலயங்களிலும் மணியோசையை எழுப்புவார்கள். இவ்வாறு தொடர் முறையில் மணி ஒலிக்கப்படும். அதன் பின்தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கும்.

* சுவீடன் நாட்டில் மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை நடும் போது பச்சை இலைகளை பயன்படுத்துவதில்லை. இறப்பின் சின்னமாக பச்சை மரம் இருப்பதால் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு முழுக்க முழுக்க பூக்களையே பயன்படுத்தி அலங்கரிக்கின்றனர்.

* கிறிஸ்துமஸ் குடில்களை முதன் முதலாக புனித பிரான்சிஸ் என்பவர் 1722-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.

* பின்லாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று மக்கள் தேவாலயங்களுக்குச் செல்ல சறுக்கு வண்டியை பயன்படுத்துகின்றனர்.

* ஸ்காட்லாந்தில் இருபது நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறும். கடைசி நாள் விழாவை ‘எபிபனி’ என்பர்.

* தானாவில் கிறிஸ்துமஸ் அன்று 12 வகை பதார்த்தங்கள் இருக்கும். இவை ஏசுவின் 12 சீடர்களை நினைவுபடுத்துபவை.

* கிரீசில் கிறிஸ்துமஸ் அன்று புல்லுருவி செடியின் முன் நின்று காதலர்கள் முத்தம் கொடுத்தால், ‘கண்டிப்பாக உன்னை திருமணம் செய்து கொள்வேன்’ என்று பொருள்.

* போலந்தில் கிறிஸ்துமஸ் மரத்தில் சிலந்தி கூடு நிச்சயம் இருக்கும். ஏசுவின் போர்வையை சிலந்தி நெய்து கொடுத்ததாக ஐதீகம். சிலந்தி கூடு வைத்தால் நல்லது நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் வரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

தொகுப்பு: மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

 

The post கிறிஸ்துமஸ் துளிகள் appeared first on Dinakaran.

Tags : Kumkumam Dozhi ,England ,European ,Germany ,Austria ,
× RELATED கிச்சன் டிப்ஸ்