×

கண்ணூரில் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய நபர்: சிறு காயம் இன்றி நடந்த காட்சி வெளியீடு

கேரளா: கேரள மாநிலம் கண்ணூரில் ரயில்வே தண்டவாளத்தை பள்ளி பேருந்தின் உதவியாளர் கடந்த போது திடீரென ரயில் வந்ததால் சற்றும் தாமதிக்காமல் தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பியுள்ளார். பவித்ரன் என்பவர் தனியார் பள்ளி வாகனத்தில் கண்டெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து நேற்றைய தினம் வீடு திரும்பும் போது கண்ணூர் பள்ளிப்பாறை என்ற இடத்தில் அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது எதிரே திடீரென ரயில் வந்துள்ளது ரயிலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவித்ரன் சற்றும் தாமதிக்காமல் ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். 23 பெட்டிகள் கொண்ட அந்த ரயில் முழுமையாக கடந்து சென்ற பிறகு அவர் ரயில்வே தண்டவாளத்தில் சிறு காயங்கள் இல்லாமல் உயிர் தப்பினார். இந்த காட்சியை எதிர்திசையில் அமர்ந்திருந்த ஒருவர் விடியோ பதிவு செய்தார். ரயில் வரும் போது எந்த விதமான பதற்றமும் அடையாமல் சட்ரென்று ரயில் தண்டவாளத்தில் படுத்து நபர் உயிர் தப்பிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

The post கண்ணூரில் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய நபர்: சிறு காயம் இன்றி நடந்த காட்சி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Kannur ,Kerala ,Kannur, Kerala ,Pavithran ,
× RELATED கேரளாவில் மீண்டும் பரவுகிறது குரங்கம்மை: 2 பேருக்கு தீவிர சிகிச்சை