- ஒடிசா
- கவர்னர்
- கேரளா
- பீகார் கவர்னர்கள்
- ஜனாதிபதி
- திரௌபதி முர்மு
- புது தில்லி
- ரகுபீர் தாஸ்
- ஆளுநர்
- ஹரிபாபு கம்பம்பட்டி
- மிசோரம்
- கவர்னர்…
புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* ஒடிசா கவர்னராக இருந்த ரகுபீர் தாசின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
* மிசோரம் கவர்னராக இருந்த ஹரிபாபு கம்பம்பட்டி ஒடிசாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
* மிசோரம் புதிய கவர்னராக ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் விஜய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
* கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
* பீகார் கவர்னராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளாவுக்கு மாற்றப்படுகிறார்.
* முன்னாள் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post ஒடிசா ஆளுநர் ராஜினாமா ஏற்பு கேரளா, பீகார் கவர்னர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு appeared first on Dinakaran.