×

திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்கான 1.40 லட்சம் டிக்கெட் 25 நிமிடத்தில் முன்பதிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. அதன் வழியாக 19ம் தேதி வரை, தொடர்ந்து, 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஒரு நாளைக்கு 14 ஆயிரம் டிக்கெட் என 10 நாட்களுக்கு 1.40 லட்சம் டிக்கெட்டுக்கான முன்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான 25 நிமிடங்களில் 1.40 லட்சம் பக்தர்கள் டிக்கெட்கள் அனைத்தையும் முன்பதிவு செய்து கொண்டனர். இந்த டிக்கெட்களை பெற 14 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் தேவஸ்தான இணையத்தில் முயற்சி செய்த நிலையில், இணைய சேவை அதிவேகமாக இருந்த 1.40 லட்சம் பக்தர்கள் அடுத்தடுத்து முன்பதிவு கிடைத்தது. இதனால் பல பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் இதே சர்வ தரிசனத்திற்காக திருப்பதியில் 9 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்தில் என சுமார் 91 கவுன்டர்களில் 10, 11, 12ம் தேதிகளுக்கான டிக்கெட்கள் 8ம் தேதி காலை முதல் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு 13ம் தேதி முதல் வழக்கம்போல் அந்தந்த நாட்களுக்கு உண்டான சர்வ தரிசன இலவச டோக்கன்கள் தற்போதுள்ள சினிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்பளக்ஸ் ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த டோக்கன் பெற்ற பக்தர்கள் மற்றும் ₹300 சிறப்பு நிழைவு தரிசன டிக்கெட், வாணி டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே இந்த 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்கான 1.40 லட்சம் டிக்கெட் 25 நிமிடத்தில் முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala ,Vaikuntha Ekadashi ,Tirupati ,Ezhumalaiyan ,Temple ,Vaikuntha ,Ekadashi ,
× RELATED கூட்ட நெரிசலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்...