×

கேரளாவில் மீண்டும் பரவுகிறது குரங்கம்மை: 2 பேருக்கு தீவிர சிகிச்சை

திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து 2 பேரும் கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கடந்த வருடம் முதன் முதலாக குரங்கம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறினார்.

இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து வந்த வயநாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அபுதாபியில் இருந்து கண்ணூர் வந்த மேலும் ஒரு வாலிபருக்கும் குரங்கம்மை நோய் உறுதியானது. உடனே அவரும் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 பேருக்கும் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கேரளாவில் மீண்டும் பரவுகிறது குரங்கம்மை: 2 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Monkeypox ,United Arab Emirates ,Kannur Government Hospital ,
× RELATED தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவக்...