×

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம்!!

டெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் குமாா் மிஸ்ரா, கடந்த ஜூன் 2021-ஆம் ஆண்டு என்எச்ஆா்சி-யின் 8-ஆவது தலைவராக நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 1, 2024-ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்தப் பதவி காலியாக உள்ளது. என்எச்ஆா்சி உறுப்பினரான விஜயபாரதி சயானி அதன் தற்காலிக தலைவராக பணியாற்றி வருகிறாா். பிரதமா் தலைமையிலான குழு என்எச்ஆா்சி தலைவரை தோ்வு செய்யும்.

இந்த குழுவின் உறுப்பினா்களாக மக்களவை தலைவா், உள்துறை அமைச்சா், மக்களவை எதிா்க்கட்சி தலைவா், மாநிலங்களவை எதிா்க்கட்சி தலைவா் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவா் ஆகியோா் உள்ளனா். இதனிடையே பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கடந்த வாரம் மனித உரிமை ஆணைய தலைவராக வி.ராமசுப்பிரமணினை தேர்வு செய்தனர். இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியவர் ராமசுப்பிரமணியன். இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் ராமசுப்பிரமணியன் பணியாற்றியுள்ளார்.

The post தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம்!! appeared first on Dinakaran.

Tags : National Human Rights Commission ,Supreme Court ,V. Ramasubramanian ,Delhi ,Justice ,Arun Kumar Mishra ,8th President ,NHS ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED தேசிய மனித உரிமைகள் ஆணைய புதிய தலைவராக...