×

குஜராத் மாநிலம் சூரத்தில் சவுராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

குஜராத்: குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கிம் ரயில் நிலையம் அருகே சவுராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. தாதர் – போர்பந்தர் இடையே செல்லும் சவுராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்தனர். ரயில் தடம் புரண்ட விபத்து காரணமாக தாதர் போர்பந்தர் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

The post குஜராத் மாநிலம் சூரத்தில் சவுராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Surat, Gujarat ,Gujarat ,Saurashtra Express ,Kim railway station ,Dadar ,Porbandar ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் சூரத் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து