×

தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என நிபந்தனை ஏதும் வைக்கமாட்டோம்: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

கடலூர்: தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என நிபந்தனை ஏதும் வைக்கமாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்று நிபந்தனை ஏதும் வைக்க மாட்டோம். இவ்வளவு தொகுதிகள் வேண்டும் என நாங்கள் முன்கூட்டியே நிபந்தனை வைத்ததில்லை. முந்தைய தேர்தல்களில் நாங்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட்டிருக்கிறோம்.

கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதை அனுச்சரித்து எங்கள் முடிவை நாங்கள் மேற்கொள்வோம். எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறபோது தான் முடிவு செய்வோம். கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து வழங்கவேண்டும். வீராணம் ஏரியை பகுதி பகுதியாக தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

The post தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என நிபந்தனை ஏதும் வைக்கமாட்டோம்: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vice President ,Thirumavalavan ,Cuddalore ,Katumannarkovo ,Visika Pawar Thirumavalavan ,
× RELATED சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி...