×

திருமயம் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

திருமயம் : திருமயம் அருகே ஜல்லி கற்கள் பெயந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கம்மங்குடிபட்டி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் அதிக பயன்படுத்தும் கிராம சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் செப்பணிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே திருமயம் பெல் நிறுவனத்தில் இருந்து கடியாபட்டி செல்லும் சாலை, இளஞ்சாவூர் இருதயபுரத்தில் இருந்து கம்மங்குடிபட்டி செல்லும் சாலை குறிப்பிட்ட தொலைவு புனரமைக்கப்பட்ட நிலையில் கம்மங்குடிட்டி கிராம பகுதிக்குள் செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் சாலையை இதுவரை அதிகாரிகள் புனரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சாலையின் பெரும் பகுதி சேதம் அடைந்து சாலை முழுவதும் சல்லிக்கற்கள் பரவி காணப்படுவதால் சாலையை பயன்படுத்தும் மாணவர்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

அதேசமயம் மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுவதால் சாலை மிகவும் மோசமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்கிறது. எனவே கம்மங்குடிபட்டி கிராம மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட சாலையை புனரமைப்பு செய்ய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமயம் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : JALLEY STONE ROAD ,Kammangudipatty village ,Thirumayam, Pudukkottai district ,Jalli ,May ,Dinakaran ,
× RELATED திருமயத்தில் வங்கி கட்டிடத்தில்...