×

ஓட்டப்பிடாரம் அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி

ஓட்டப்பிடாரம் : குறுக்குச்சாலை அருகே கார் மோதியதில் பைக்கில் வந்த 2 பேர் பரிதாபமாக பலியாயினர். தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமம் நாடார் தெருவைச் சேர்ந்தவர்கள் சித்திரவேல் (60), திரவிய ராஜ் (55). இருவரும் பைக்கில் நேற்று மாலை எட்டயபுரம் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

குறுக்குச்சாலை அருகே வந்த போது பெட்ரோல் போடுவதற்காக பைக்கை திருப்பி உள்ளனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார் டிரைவர் குரும்பூரை அடுத்த துறையூரைச் சேர்ந்த பள்ளிவாசல் தெரு அலாவுதீன் மகன் சையது முகமது (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவத்தால் தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post ஓட்டப்பிடாரம் அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chitravel ,Diraviya Raj ,Talavanvadali ,Nadar Street ,Thoothukudi district ,Atur ,Dinakaran ,
× RELATED வருசநாட்டில் விவசாயிகள் தெருமுனை பிரசாரம்