×

தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் பழங்குடியினர் கிராமத்துக்கு ரூ.4 கோடியில் தார் சாலை அமைப்பு பணி துவக்கம்

கூடலூர் : தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட போஸ்பரா சங்கிலி கேட் முதல் செம்பக்கொல்லி பழங்குடியினர் காலனி வழியாக பேபி நகர் வரையில் சுமார் 4 கி.மீ தூரத்திற்கு புதிய சாலை அமைப்பு பணிகள் நேற்று துவங்கியது. தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதி ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணி துவக்க நிகழ்ச்சி பூமி பூஜையுடன் நடைபெற்றது.

இதில், பேரூராட்சி மன்றத்தலைவர் வள்ளி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், கூடலூர் ஒன்றிய திமுக செயலாளர் லியாக்கத் அலி, பேரூராட்சி துணை தலைவர் யூனுஸ் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப், பொறியாளர் சேகர், வனத்துறை அலுவலர் சசி முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மூர்த்தி, மாதேவ், முகேஷ், ரின்சாத் மற்றும் சுரேஷ், ஜெயக்குமார், ராமச்சந்திரன் மற்றும் செண்பகக்கொல்லி பகுதியை சேர்ந்த ஏராளமான பழங்குடி இன பொது மக்கள், பேரூராட்சி மன்ற ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி, பேபி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் இந்த சாலை இதுவரை மண் சாலையாகவே காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி தொடர்ச்சியாக இப்பகுதி பழங்குடி இன மக்கள் மற்றும் பழங்குடி இன மக்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து தற்போது முதல் முறையாக இந்த சாலையை சீரமைக்கும் பணிகளுக்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் பழங்குடியினர் கிராமத்துக்கு ரூ.4 கோடியில் தார் சாலை அமைப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Thevarsolai Panchayat ,Gudalur ,Bospara Sangili Gate ,Baby Nagar ,Sembakolli Tribal Colony ,Tamil Nadu ,
× RELATED செம்பக்கொல்லி பழங்குடியினர்...