- ஊட்டச்சத்து ஊழியர்கள் சங்கம்
- உசிலம்பட்டி
- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்
- பஞ்சாயத்து
- யூனியன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
உசிலம்பட்டி, டிச. 21: காலி பணியிடங்களை நிரப்புவதுடன், ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் என்று கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ மாநில துணை பொதுச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் பங்கேற்று கோரிக்கைகள் குறித்த கோஷங்களை எழுப்பினர்.
The post காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.