- மாநில கிரிக்கெட் போட்டி பெண்கள்
- திண்டுக்கல்
- அணி
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
- இணை செயலாளர்
- மகேந்திர குமார்
- மாநில கிரிக்கெட் போட்டி மகளிர் சீனியர் அணி தேர்வு
- தின மலர்
திண்டுக்கல், டிச. 21: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கான சீனியர் அணியின் தேர்வு வரும் டிச.25ம் தேதி நடைபெற உள்ளது என இணை செயலாளர் மகேந்திர குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பெண்களுக்கான மாநில அளவிலான சீனியர் பிரிவு கிரிக்கெட் போட்டி நடத்த உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கான சீனியர் அணி தேர்வு வரும் டிச.25ம் தேதி காலை 10 மணிக்கு, திண்டுக்கல் பழைய கரூர் ரோடு, எம்.வி.எம். நகர், வலை பயிற்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் ஆதார் கார்டு நகல் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் வர வேண்டும். இதில் 12 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். (Born on or before 31.08.2012). மேலும் தகவல்களுக்கு இணை செயலாளர் ராஜமோகன்- 79042 11151, மேலாளர் மணிகண்டன்- 9655663945 ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post மாநில கிரிக்கெட் போட்டி பெண்கள் சீனியர் அணிக்கு டிச.25ல் தேர்வு appeared first on Dinakaran.