திருவாரூர், டிச. 21: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நாடாளுமன்றத்தில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் நகரம், ஒன்றியம் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியம் சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக மாவட்ட செயலாளர் (பொ) கேசவரஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்து.
இதில் மாநிலக் குழு உறுப்பினர் சந்திரசேகரஆசாத், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முருகானந்தம், ஒன்றியச்செயலாளர்கள் நாகராஜன், டேவிட்ராஜ், நகரச் செயலாளர் செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் புலிகேசி, தியாகராஜன், மாரியப்பன் மற்றும் பொறுப்பாளர்கள் தர்மதாஸ், குணசேகரன், பாலதண்டாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அமித்ஷா பதவி விலக கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.