- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சபை நிர்வாக
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்
- ஜனாதிபதி
- ஜெயராஜ்
- மாவட்ட செயலாளர்
- Jothimani
- மாநில பொதுச் செயலாளர்
- ஷண்முகநாதன்
புதுக்கோட்டை,டிச.21: புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜோதிமணி அறிக்கை வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். பி.லிட், பி.எட் படித்தோருக்கு ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும்\” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்/
\”தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதியில் ஒன்றான புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளி் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். என வலியுறுத்தி கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூலை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
The post புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.