தொண்டி, டிச. 21: தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் ராட்டினம் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் பரமக்குடியை சேர்ந்த ராட்டினம் தொழிலாளி முத்துக்குமார் கடந்த நவ.1ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை சரவணன் மற்றும் திருவாடானை கார் டிரைவர் கெல்வின் ராஜ், சிவகங்கை மாவட்டம் உருளியை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துராஜா (20), திருவாடானையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (19), கடம்பாகுடி சொக்கு (19), மதகுபட்டி விக்னேஷ் (23), திருவாடானை செல்வா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் திருவாடானையை சேர்ந்த அஜீத்குமார் (19) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் இந்த கொலையில் இவரும் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவரையும் கைது செய்துள்ளனர்.
The post தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.