×

200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிங்கம்புணரி, டிச. 21: சிங்கம்புணரி வடக்குவளவு செட்டியார் தெருவில் ஒரு வீட்டின் அருகே ரேஷன் அரிசி கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு கிராம நிர்வாக அலுவலர் பாண்டிச்செல்வம் ஆய்வுக்காக சென்றார். அப்போது, அங்கு சுமார் 200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தது. அவற்றை கைப்பற்றி நுகர்வோர் வாணிப கழகம் சிங்கம்புணரி கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசியை இங்கு வைத்து சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

The post 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Singambunari ,Setiar Street ,Pondichelvam ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே...