- Kulachal
- குளச்சல் போக்குவரத்து போலீசார்
- இன்ஸ்பெக்டர்
- சந்தனகுமார்
- சிதம்பர தாணு
- சுரேஷ் குமார்
- தின மலர்
குளச்சல்,டிச.21: குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தணகுமார் தலைமையில் உதவி சப் – இன்ஸ்பெக்டர்கள் சிதம்பர தாணு, சுரேஷ்குமார் உள்பட காவலர்கள் நேற்று முன்தினம் மாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்தி கொண்டு பைக் ஓட்டிய 6 பேரை பிடித்து விசாரித்தனர். அதைத்தொடர்ந்து பிரீத் அனலைசர் கருவி மூலம் அவர்களை பரிசோதித்தனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185 ன் படி குடிபோதையில் வாகனத்தை இயக்குதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
The post குளச்சலில் மதுபோதையில் இயக்கிய 6 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.