×

ஐஐடி ஆராய்ச்சி மையம், ஆய்வகங்களை ஜன.3, 4ம் தேதிகளில் மக்கள் பார்வையிடலாம்

சென்னை: ஜனவரி 3, 4ம் தேதிகளில் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும் ஆய்வகங்களையும் பார்வையிடலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘அனைவருக்கும் சென்னை ஐஐடி’ என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் ஐஐடியில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப ஆய்வகங்களையும் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும். அந்த வகையில் 2025 ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐஐடியில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றோடு ஆராய்ச்சி திட்டப்பணிகளை எடுத்துரைக்கும் 60க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அரங்குகளையும் பொதுமக்கள் பார்க்கலாம். இந்த சிறப்பு திட்டத்தின்கீழ் ஐஐடியை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் டிசம்பர் 25ம் தேதிக்குள் shaastra.org/open-house. என்ற இணையதள இணைப்பில் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐஐடி ஆராய்ச்சி மையம், ஆய்வகங்களை ஜன.3, 4ம் தேதிகளில் மக்கள் பார்வையிடலாம் appeared first on Dinakaran.

Tags : IIT Research Centre ,Chennai ,IIT Chennai ,IIT ,IIT Research Centre, ,Dinakaran ,
× RELATED கலை, கலாசாரத் துறை மாணவர்களுக்கு...