×

இந்தியா 2047ல் வல்லரசாகும் ஆளுநர் பேச்சு

வேலூர்: முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர்வு முகாம் வேலூரில் நேற்று நடந்தது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று ரூ.1 கோடி மதிப்பிலான ஓய்வூதிய பலனுக்கான காசோலைகளை வழங்கி, போர்களில் வீரமரணம் அடைந்தவர்களது குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கி பேசுகையில், நாம் நிம்மதியாக உறங்க காரணம், ராணுவ சிப்பாய்கள் தான். பிரதமர் நரேந்திர மோடி ராணுவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறார். இந்தியா 2047ல் வல்லரசு நாடாக மாறும். அதற்காக 5 கோட்பாடுகளை வகுத்து பிரதமர் நரேந்திர மோடி பணியாற்றி வருகிறார். ராணுவ பணி அரசு வேலை அல்ல, இது ஒரு மகத்தான சேவையாகும். ராணுவ வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தியா 2047ல் வல்லரசாகும் ஆளுநர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor ,Vellore ,R.N. Ravi ,Dinakaran ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்...