×

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விலகல்

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை கடந்த ஜூன் 26ம் தேதி கைது செய்தது. அவரது சகோதரர் முகமது சலீமை ஆகஸ்ட்டில் கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, ஜாமீன் கோரி இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 19ம் தேதி மாலை ஆறு மணியளவில் உத்தரவு பிறப்பித்தாகவும் ஆனால் அதற்கு முன்பாகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து, மனு நிலுவையில் இருந்த போது எப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

The post உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விலகல் appeared first on Dinakaran.

Tags : Court ,Judge ,A.D. Jagadish Chandra ,Chennai ,The Enforcement Directorate ,DMK ,Jaffer Sadiq ,Mohammed Salim… ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்