- சபரிமலை
- ஐயப்ப பகவான்
- பாலக்காடு
- மனுராஜ்
- மணி
- அகத்தேத்தரை, பாலக்காடு, கேரளா
- 2
- மலம்புழா அரசு மேல்நிலைப் பள்ளி
- ஐயப்ப பகவான்...
பாலக்காடு: ஐய்யப்பனுக்கு மாலை அணிந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், சபரிமலைக்கு ஸ்கேட்டிங் செய்தபடியே பயணம் செல்கிறார். கேரள மாநிலம் பாலக்காடு அகத்தேத்தரையைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் மனுராஜ்(17). மலம்புழா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயில்கிறார். இவர் ஐயப்பனுக்கு முதன் முறையாக மாலை அணிந்துள்ளார். இந்நிலையில் இருமுடி கட்டுடன் ஸ்கேட்டிங் செய்தபடியே சபரிமலைக்கு நேற்று புறப்பட்டார். பாலக்காட்டிலிருந்து சபரிமலை பம்பா நதிக்கரை வரை ஸ்கேட்டிங் செய்தபடியே பயணம் செய்து பின்னர் பம்பாவிலிருந்து கால்நடையாக சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
மனுராஜின் பயணத்தை பாலக்காட்டில் எம்எல்ஏ ராகுல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். உடன் ஐயப்ப பக்தர்கள் ஜீப்பில் பயணத்தை தொடர்ந்துள்ளனர். இப்பயணத்திற்கு போலீசாரும், குழந்தைகள் நலப்பாதுகாப்பினரும் அனுமதி வழங்கியுள்ளனர். மனுராஜ் ஸ்கேட்டிங்கில் லிம்கா புக் ஆப் வேல்ட் ரெக்கார்டும், 60 கி.மீ., தொலைத்தூரம் ஸ்கேட்டிங் செய்து பெஸ்ட் ஆப் இந்தியன் ரெக்கார்டும் விருதுபெற்றவர்.
The post ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு ஸ்கேட்டிங்கில் செல்லும் பிளஸ் 2 மாணவர் appeared first on Dinakaran.