- திமுக
- கே.அன்பசாகன்
- தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம்
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
- தமிழ்
- தமிழ்நாடு
- அமைச்சர்
- கலைஞர் அறிவாலயம்
தஞ்சாவூர், டிச.20: தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த உருவப் படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .
நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் இறைவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், கனகவல்லி பாலாஜி, தொழிலாளர் அணி அமைப்பாளர் துரை.நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி,
செல்வகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில் வேந்தன், பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், நீலகண்டன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரமணி சுப்ரமணியன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கமலாரவி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தமிழன் செல்வன், மண்டல குழு தலைவர் கலையரசன், கவுன்சிலர் உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தஞ்சாவூர் கலைஞர் அறிவாலத்தில் பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.