- மின்சார பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி
- அறந்தாங்கி
- தமிழ்நாடு மின்சார வாரியம்
- மின்சாரம்
- அறந்தாங்கியில் மின்சார பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி
- தின மலர்
அறந்தாங்கி,டிச.20: அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் சிக்கனம், மின்விபத்து, மின் திருட்டு தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மின்சார விழிப்புணர்வு வார விழா டிசம்பர் 14ம் தேதி முதல் நாளை (21ம் தேதி) வரை கொண்டாடப்படுகின்றது. இதன் அடிப்படையில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறந்தாங்கி கல்வி மாவட்ட ஆவணத்தாங்கோட்டை மேற்கு பள்ளியின் இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியை அறந்தாங்கி இளஞ்செஞ்சிலுவை சங்க வட்டார கன்வீனர் (நடுநிலைப்பள்ளி) பாஸ்கரன் தொடங்கி வைத்தார். பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். பேரணியில் மின்சாரம் நாட்டின் ஆதாரம், மின் சிக்கனம் தேவை இக்கனம், மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம், நாம் சேமித்த மின்சாரம் நாட்டிற்கு ஆதாயம், போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மாணவர்கள் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
The post அறந்தாங்கியில் மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.