அரியலூர், டிச.20: விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் குறைகளை மனு மூலமாக கலெக்டருக்க தெரிவித்து தீர்வு காணலாம்.
The post வரும் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.