×

பல வருட ரகசிய காதல் உறுதி செய்யப்பட்டது; பரினீதி சோப்ரா, ராகவ் சத்தா திருமண நிச்சயதார்த்தம்

புதுடெல்லி: பரினீதி சோப்ரா, ராகவ் சத்தா திருமண நிச்சயதார்த்த விழா டெல்லி கபுர்தலா ஹவுசில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் இருவீட்டார் மற்றும் அவர்களின் நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னிலையில் பரினீதி சோப்ராவும், ராகவ் சத்தாவும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இதை தொடர்ந்து நிச்சயதார்த்த விழாவில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

இருவரும் வெள்ளை நிற உடையில் ஜோடியாக போஸ் கொடுத்திருந்தனர். அந்த போட்டோக்கள் வைரலானது. பரினீதி சோப்ரா, ராகவ் சத்தா இருவரும் லண்டனில் இணைந்து படித்தனர். அப்போது நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்கள், பிறகு ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்கத் தொடங்கினர். அப்போது வெளியான தகவல்களுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சீவ் அரோரா, அந்த ஜோடியின் போட்டோக்களை கடந்த மார்ச் மாதம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இதற்கு பிறகே பரினீதி சோப்ரா, ராகவ் சத்தாவின் காதல் உறுதி செய்யப்பட்டு, தற்போது திருமண நிச்சயதார்த்தம் வரைக்கும் சென்று உள்ளது. அவர்கள் திருமணம் எந்த தேதியில், எந்த இடத்தில் நடக்கும் என்பதை இன்னும் அவர்கள் ரகசியமாக வைத்துள்ளனர்.

டெல்லியில் நடந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், அவரது மனைவி குர்பிரீத் கவுர் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களும், திரையுலகினரும் நேரில் வந்திருந்து பரினீதி சோப்ரா, ராகவ் சத்தா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post பல வருட ரகசிய காதல் உறுதி செய்யப்பட்டது; பரினீதி சோப்ரா, ராகவ் சத்தா திருமண நிச்சயதார்த்தம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Parineeti Chopra ,Raghav Sadha ,New Delhi ,Raghav Chadha ,Kapurthala House, Delhi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில்...