- தமிழ் நகர்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திணைக்களம்
- மையங்கள்
- மற்றும் பயிற்சி துறை
சென்னை: தமிழகத்தில் புதிதாக துவங்கியுள்ள அரசு ஐடிஐக்களில் மாணவர் நேரடி சேர்க்கை வருகிற 31ம் தேதி வரை நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு கீழ்காணும் மாவட்டங்களில் தெரிவிக்கப்பட்ட 10 இடங்களில் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்புதிய தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேர்க்கைக்கான கால அவகாசம் 31.12.2024 வரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் – வேப்பூர், திருவண்ணாமலை – செங்கம், திண்டுக்கல் – குஜிலிம்பாறை, ராமநாதபுரம் – கமுதி, கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி, நாமக்கல் – சேந்தமங்கலம், புதுக்கோட்டை – கந்தர்வகோட்டை, திருவாரூர்- கூத்தாநல்லூர், திருப்பத்தூர் – நாட்றாம்பள்ளி, தூத்துக்குடி – ஏரல் ஆகிய 10 இடங்களில் சேர விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள், விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9499055689 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு ஐடிஐக்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை: 31ம் தேதி வரை கால அவகாசம் appeared first on Dinakaran.