×

அரசு மருத்துவமனையில் உலக சித்தர் தினம் கொண்டாட்டம்

ராமநாதபுரம்,டிச.20: ராமநாதபுரம், முதுகுளத்தூர், கடலாடி அரசு மருத்துவமனை சித்தா மருத்துவ பிரிவில் உலக சித்தர் தின விழா கொண்டாடப்பட்டது. சித்த மருத்துவத்தின் தந்தையாக போற்றப்படும் அகஸ்திய மாமுனிவரின் பிறந்த நாளான மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஆயில்யம் நட்சத்திரம் தினத்தன்று உலக சித்தர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் செயல்படும் சித்தா பிரிவில் உலக சித்தர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சித்த பிரிவில் மருத்துவர்கள் புகழேந்தி, சுஜாதா ஆகியோர் முன்னிலையிலும், கடலாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர் டேவிட் தலைமையிலும், சித்த மருத்துவர் பிருந்தா, மருந்தாளுனர் மின்னல்கொடி முன்னிலையிலும், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவர் முஜிதாபாய் தலைமையிலும் சித்தர் அகஸ்தியர் மாமுனிவர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், சிகிச்சை, பரிசோதனை செய்ய வந்தவர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், முளைக்கொட்டிய சிறுதானியங்கள், வெற்றிலை, கிராம்பு, மிளகு, ஏலக்காய், நிலக்கடலை, பேரிச்சை பழம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரசு மருத்துவமனையில் உலக சித்தர் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : World Siddha Day ,Government Hospital ,Ramanathapuram ,Siddha Medicine Department of ,Government ,Hospital ,Muthukulathur ,Oilyam Nakshatra ,Margazhi ,Agasthya Mamunivar ,Siddha ,Dinakaran ,
× RELATED விபத்துகளை தடுக்கும் வகையில் மஞ்சூர்...