×

நாகர்கோவிலில் ஓய்வூதியர் தின கருத்தரங்கு

நாகர்கோவில், டிச. 20: நாகர்கோவிலில் ஓய்வூதியர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. நாகர்கோவில் டென்னிசன் சாலையில் உள்ள அரசு ஊழியர் இல்லத்தில் ஒன்றிய, மாநில அரசு மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஓய்வூதியர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராஜநாயகம் தலைமை வகித்தார். ஐவின் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் குப்பன் சிறப்புரை ஆற்றினார். மகளிர் ஒருங்கிணைப்பு குழு இந்திரா உள்பட பலர் பேசினர். கூட்டத்தில், தற்ேபாது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்தான்.

புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஓய்வூதிய விதிகள் உருவாக்கப்படாமலும், வழங்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பணிக்கொடை ஆகியன நிர்ணயிக்கப்படாமலும் இருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியமும், குடும்ப ஓய்வூதியமும், பணிக்கொடையும், வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அதற்கான ஆணைகள், விதிகள் இதுவரை அறிவிக்கப்பட வில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்ைத அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவதானு நன்றி கூறினார்.

The post நாகர்கோவிலில் ஓய்வூதியர் தின கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Pensioner's Day Seminar ,Nagercoil ,Coordination Committee of the Union, State Government and Pensioners' Associations ,Government ,Home ,Dennison Road, Nagercoil ,Coordination Committee… ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய...